கோவில் அமைப்பு

kovil-11

கருவறை அமைப்பு 6×6 அடியாக எழுப்பப்பட்டு சுமார் 15 அடி உயர கோபுரம் எழுப்பப்பட்டு உள்ளன. கருவறையில் ஸ்ரீ மகாலெட்சுமி, ஸ்ரீ மகாவிஷ்ணு சங்கு, சக்கரம் தாங்கி நின்று மகாலெட்சுமி தாமரை மலருடன் கிழக்கு நோக்கி நின்று காட்சி தருவதாக அமைந்துள்ளன. கருவறையின் வெளியில் மணி மண்டபம் 11×11 அடி அளவில் கட்டப்பட்டுள்ளது. மணி மண்டபத்தின் நடுப்பகுதியில் கருட பகவான் மேற்கு நோக்கி நின்று விஷ்ணு பகவான் வாகனமாக காட்சி தருகிறார். வலது புறம் மூலவர் மகாகணபதி, வலதுபுறம் நாகர், முன்புறம் மகாகணபதி எதிரே மூஷிக வாகனம் எழுப்பப்பட்டு மகாகணபதி கிழக்கு முகமாக இருந்து , வரும் பக்தர்களின் வினைகளைத் தீர்க்கும் விக்னேஷ்வரராக காட்சி தருகின்றார். மணிமண்டபத்திற்கு பின் பலிபீடமும், அதன் பின்வாசல் நேரே துளசி மாடமும் எழுப்பப்பட்டு மிக அற்புத கோலத்துடன் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது.