சிறப்பு நன்மைகள்

kovil-1

108 திருத்தலங்களில் இல்லாத ஒரு அதிசயம் இத்தலத்தில் அமைந்துள்ளது என்னவென்றால் ஸ்ரீ மகாலெட்சுமி அம்பாளும், ஸ்ரீ மகாவிஷ்ணுவும் இணைந்து இருப்பது இத்தலம் மட்டும் தான். எனவே இத்திருத்தலத்தில் அனைத்து சிறப்புகளும் முக்கியமானது.

இத்தலத்தில் ஒவ்வொரு புதன் கிழமையும், சனிக்கிழமையும் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு புதனும், சனியும் சிறப்பு அன்னதானம் நடைபெறுகின்றன. எனவே அன்னதானத்திற்கு உதவி செய்யும் நல்ல உள்ளங்களுக்கு இறைவன் அருளால் எல்லாவித நன்மையும் நடைபெற பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன. எனவே இது 108 தலங்களிலும் முக்கிய தலமாகக் கருதப்படுகின்றது.

இத்திருக்கோவில் மக்கள் யாவும் அன்றாடம் பயணிக்கும் சாலையில் உள்ளதால் மகாலெட்சுமியையும், மகாவிஷ்ணுவையும் தினம் தினம் மக்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். மக்களுக்கு மிகவும் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் இத்திருக்கோவிலிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மலை உச்சியில் ஸ்ரீ ராமபிரான், சீதாதேவி, லட்சுமணன் – ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் ஸ்ரீ ராமபிரான் மற்றும் மகாவிஷ்ணுவையும் ஒருசேர தரிசனம் செய்வது மிக்க மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் உள்ளது என்று மகிழ்ச்சியடைகின்றனர்.