கோபுர அமைப்பு

kopuram

கோபுர உச்சியில் கோபுர கலசம் எழுப்பப்பட்டுள்ளது. கோபுரம் முன் மகாவிஷ்ணு பகவான் நின்ற கோலத்துடன் வலப்பக்கம் கருட பகவானும், இடது பக்கம் ஆஞ்சநேயரும், தெற்குப்பக்கம் நடுப்பகுதியில் தட்சிணாமூர்த்தியும், தென்மேற்கில் கருட பகவானும், மேற்குபக்கம் நடுப்பகுதியில் மகாவிஷ்ணு நரசிம்மர் தோற்றத்துடனும், வலதுபுறம் ஆஞ்சநேயரும், வடக்குப்பக்கம் நடுப்பகுதியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளும், கிழக்குக் கடைசியில் ஆஞ்சநேயரும் காட்சி அளிக்கிறார்கள்.

கோபுர முன் முகப்பில் நடுப்பகுதியில் மகாவிஷ்ணு பூதேவி, ஸ்ரீ தேவியாக நின்ற கோலத்துடனும் திருவாச்சிக்குள் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார்கள். வலதுபுறம் மகாகணபதி மூஷிக வாகனத்திலும், வலது பக்கம் கருட பகவான் இடது காலை ஊன்றியும், வலது காலை மடக்கி காட்சி அளிக்கிறார். மகாவிஷ்ணு இடப்பகுதியில் முருகப்பெருமான் மயில் வாகனத்திலும், வலதுபுறம் ஆஞ்சநேயர் இடது காலை ஊன்றி வலது காலை மடக்கியும் காட்சியளிக்கின்றனர். இவை அனைத்தும் காண்போர் கண்களுக்கு மிக அழகாகவும், அற்புதமாகவும் கருணை மூர்தியாக காட்சியளிக்கின்றன.