சிறப்புப் பூஜைகள்

swami-1

ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் மாலை 5 மணியளவில் வழக்கமான பூஜை நடைபெறுகின்றது. மற்றும் இவ்விரண்டு விஷேச பூஜை தினங்களில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அன்னதானமும் நடக்கின்றன. இத்திருத்தலத்தில் பௌர்ணமி தோறும் சத்தியநாராயண பூஜை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலெட்சுமி பூஜை நடத்தப்படுகிறது.  மேலும் பெருமாள் அவதார தினங்கள் மற்றும் சிறப்பு தினங்கள்  வரும் போதும் பூஜைகள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்படுகின்றன. இப்பூஜையில் கடவுளை நினைத்து வழிபடுவோர் நினைத்த காரியம் நிறைவேற்றப்படுகின்றன. துளசி நீரும், துளசியும், செந்தூரமும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.